தமிழ்நாடு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,486 பேருக்கு கரோனா

25th Sep 2020 06:49 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 பேர் பலியாகியுள்ளனர். 

இதனால் மொத்த பாதிப்பு 5,69,370 ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,193 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,486 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 661 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 297 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது. 
மற்ற மாவட்டங்களின் நிலவரம்: 
அரியலூர் - 28
செங்கல்பட்டு - 277
கோவை - 661
கடலூர் - 235
தருமபுரி - 148
திண்டுக்கல் - 58
ஈரோடு - 151
கள்ளக்குறிச்சி - 57
காஞ்சிபுரம் - 165
கன்னியாகுமரி - 86
கரூர் - 49
கிருஷ்ணகிரி - 104
மதுரை - 71
நாகை - 35
நாமக்கல் - 115
நீலகிரி - 137
பெரம்பலூர் - 17
புதுக்கோட்டை - 66
ராமநாதபுரம் - 17
ராணிப்பேட்டை - 65
சேலம் - 297
சிவகங்கை - 46
தென்காசி - 53
தஞ்சை - 150
தேனி - 66
திருப்பத்தூர் - 67
திருவள்ளூர் - 229
திருவண்ணாமலை - 173
திருவாரூர் - 139
தூத்துக்குடி - 46
நெல்லை - 77
திருப்பூர் - 158
திருச்சி - 107
வேலூர் - 125
விழுப்புரம் - 162
விருதுநகர் - 42 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT