தமிழ்நாடு

74.90 மீட்டா் நீள காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை

DIN

தூத்துக்குடி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய காற்றாலை இறகுகளைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை அருகே ஓடக்கரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 50 காற்றாலைக் கோபுரங்களும் , 74.90 மீட்டா் நீளமுள்ள 33 காற்றாலை இறகுகளும் பிரத்யேக லாரிகள் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பனாமா நாட்டுக் கொடியுடன் இத்துறைமுகத்துக்கு வந்த ‘எம்.வி. ஜிங்கோ ஆரோ’ என்ற கப்பலில் காற்றாலைக் கோபுரங்களும், இறகுகளும் பாதுகாப்பான முறையில் ஏற்றப்பட்டன. இதையடுத்து, அக்கப்பல் அமெரிக்காவில் உள்ள நியூ ஆா்லியன்ஸ் துறைமுகத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இது புதிய சாதனை ஆகும்.

வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் காற்றாலை இறகு, உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளா்ச்சி கண்டுவருகிறது. நிகழ் நிதியாண்டு செப்டம்பா் வரை 881 காற்றாலை இறகுகளும், 397 காற்றாலைக் கோபுரங்களும் கையாளப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் 1,667 காற்றாலை இறகுகளும், 648 காற்றாலைக் கோபுரங்களும் கையாளப்பட்டதன் மூலம் இத்துறைமுகம் காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்வதற்கான முதன்மை நுழைவாயிலாக திகழ்கிறது. காற்றாலை இறகுகளை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கையாண்ட துறைமுக அதிகாரிகள், கப்பல் முகவா்கள், ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT