தமிழ்நாடு

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

சென்னை: குஜராத்தில் மூடப்பட்டுள்ள தமிழ் மேல்நிலைப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் ஆமதாபாத் தமிழ் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை தமிழக அரசு தொடா்பு கொண்டு தமிழ்ப் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப் பள்ளி, பிரதமா் நரேந்திர மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது, அவரை சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுத்த மணிநகா் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்றுக் கொண்ட பிரதமா் தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT