தமிழ்நாடு

ஸ்ரீவிலி. குளத்துக்கு சுவர், படிக்கட்டு சீரமைப்பு கோரி மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் குளத்தின் சுற்றுச்சுவரைக் கட்டித் தரக் கோரியும் படிக்கட்டுகளைச் சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் நகரின் மையப் பகுதியில் உள்ளது பழமையும் தொன்மையும் வாய்ந்த இந்த குளம் பல பெருமைகளை உடையது. இத்தகைய குளத்தின் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல் குலத்தின் பல்வேறு இடங்களில் படிக்கட்டுகளும் சேதம் அடைந்து உள்ளன. இவற்றைச் சீரமைத்துத் தர வேண்டும் சுற்றுப்புற சுவரைக் கட்டித்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீ வில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை மாலை குளத்துக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர் குழுவைச் சேர்ந்த ரேணுகாதேவி ,மாவட்ட குழுவைச் சேர்ந்த திருமலை, மற்றும் நகர் குழுவைச்  சேர்ந்த மரிய டேவிட், மாவட்ட செயற்குழு வை சேர்ந்த மகாலட்சுமி, உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கோயில் குளத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குளத்துக்குள் இறங்கி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தினால் வியாழக்கிழமை நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT