தமிழ்நாடு

அகரம் அகழாய்வில் 20 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 

கீழடியில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை இப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான பொருள்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி , மனிதர்கள், குழந்தைகளின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்கு கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

செப்டம்பர் 3- ந் தேதியுடன் கீழடியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவிலான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்குக் கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த உறைகிணறு கிடைத்த இடத்தில் தோண்டப்பட்டு வரும் குழியின் ஆழத்தின் அளவு அதிகரிக்கும் போது உறைகிணற்றின் அடுக்குகளும் உயருவதற்கான வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT