தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி-கார் மோதல்: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

23rd Sep 2020 06:06 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகினர், மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

கோவையைச் சேர்ந்தவர் அரசன் செய்யது அலி வயது (42), இவரது மனைவி ஜமுனா பிபி, வயது (35) மகள் பர்மிதா பர்வீன் (18) மகன் அப்துல் மாலிக் (15) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் காரில் சங்கரன்கோயில் சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்வதற்காக நேற்று மதியம் சுமார் 1.15 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தனர். 

இந்நிலையில், மடவார்வளாகம் பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது அந்த வழியாக, வன்னியம்பட்டி பகுதி ரேஷன் கடைகளுக்கு அரிசியை கொண்டு சென்ற லாரியுடன் கார் மோதி விபத்து ஏற்பட்டது. 

ADVERTISEMENT

இந்த லாரியை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிபட்டி தெருவைச் சேர்ந்த காட்டு ராஜா 50 என்பவர் ஓட்டி வந்தார். இந்த விபத்தில் காரில் வந்த அசன் சையது அலி விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டார் மற்ற மூவரும் படு காயமடைந்தனர். 

காயமடைந்த மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் ராஜபாளையம் தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விரைந்து சென்று விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT