தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்: இரு நாள்களில் 5.5 அடி உயர்வு

23rd Sep 2020 09:08 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 5.50 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வந்தது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 71,000 கனஅடியாகவும் இன்று காலை வினாடிக்கு 70,000 கனஅடியாகவும் வந்துகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக நேற்று முன்தினம் காலை 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 95.27 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 5.50 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 58.88 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்திற்குதடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகளும், மீன்வளம் பொருகும் என்று மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Mettur Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT