தமிழ்நாடு

கலாசார ஆய்வுக் குழுவில் தமிழர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது: மோடிக்கு முதல்வர் கடிதம்

23rd Sep 2020 01:31 PM

ADVERTISEMENT


சென்னை: இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்கான குழுவில் தமிழர்கள் இடம்பெறாததது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்காக 16 போ் கொண்ட நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.  மத்திய அரசின் இந்த முன்முயற்சிக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்யும் குழுவில், மிகப் பழமையான திராவிடா் கலாசாரத்தைச் சேர்ந்த அல்லது தென்னிந்தியா்கள் குறிப்பாக தமிழர்கள் யாரும் இந்த நிபுணா் குழுவில் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானதாகும். சமீபத்தில் தமிழகத்தின் கீழடி உள்ளிட்டப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நீங்கள் மாமல்லபுரம் வந்து, தமிழக பாரம்பரியத்தை நேரில் கண்டு வியந்தீர்கள். அப்போது, இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் தமிழக கலாசாரம் மற்றும் மொழிக்கு இடமளிக்காமல் முழுடையடையாது என்று என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள்.

ADVERTISEMENT

ஆனால், தற்போது, இந்திய கலாசார ஆய்வுக் குழுவில் தமிழர்கள் யாரும் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்திய கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை மறுசீரமைப்பு செய்து, அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 

Tags : Narendra Modi tn cm palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT