தமிழ்நாடு

கோவில்பட்டியில் தேசிய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

23rd Sep 2020 02:44 PM

ADVERTISEMENT


கோவில்பட்டி மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் புதிய சட்டத்தை கண்டித்து தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாட்டு வண்டியில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து புதன்கிழமை மனு அளித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை கண்டித்தும்,அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தேசிய விவசாய சங்கத் மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் மாநில பொதுச்செயலர் பரமேஸ்வரன், நகர தலைவர் ராமசாமி உட்பட தேசிய விவசாய சங்கத்தினர் மாட்டு வண்டியில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT