தமிழ்நாடு

நான்குனேரி எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

23rd Sep 2020 06:17 PM

ADVERTISEMENT

 

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் (54). இவர், கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கரோனா தொற்று உறுதியானதாம். இதையடுத்து கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்த அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பொது முடக்கக் காலத்தில் கிராமம் கிராமமாகச் சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை வழங்கியதோடு, அரசு நிகழ்ச்சிகளிலும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்று வந்தார். கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏழை-எளியவர்களுக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான நல உதவிகளைச் செய்துள்ளதாகவும், கரோனாவில் இருந்து விரைவில் மீண்டும் மக்கள் பணியை அவர் தொடர்வார் என திருநெல்வேலி அதிமுகவினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன் மொத்தம் 95 ஆயிரத்து 377 வாக்குகளைப் பெற்றதோடு, 34 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT