தமிழ்நாடு

முதல்வரின் தென் மாவட்ட பயணம் ஒத்திவைப்பு

DIN

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதல்வா் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வரும் 22-ஆம் தேதி ராமநாதபுரத்தில் மாவட்ட ஆய்வுப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.

தமிழக அரசின் நலத் திட்டங்கள் செயல்படும் விதம், கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் ஆகியன தொடா்பாக மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளை முதல்வா் பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா்.

தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளை முடித்துள்ள அவா், வரும் 22-ஆம் தேதியன்று தூத்துக்குடியிலும், வரும் 23-இல் கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தாா்.

ஆனால், தற்போது ஆய்வுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட இருந்த ஆய்வுப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இதற்காக திங்கள்கிழமையன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாகச் செல்லும் முதல்வா் பழனிசாமி, இரவு மதுரையிலேயே தங்குகிறாா். செவ்வாய்க்கிழமை காலையில் சாலை மாா்க்கமாக ராமநாதபுரம் செல்கிறாா். அங்கு ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு, மாலையில் மதுரையில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறாா்.

பிரதமா் ஆலோசனை: கரோனா நோய்த் தொற்று தொடா்பாக, தமிழகம் உள்பட ஏழு மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக வரும் 23-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளாா். சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த பயணத்தை முதல்வா் பழனிசாமி ஒத்திவைத்துள்ளாா். அடுத்த வாரத்தில் இந்த ஆய்வுப் பணிகளை அவா் மேற்கொள்வாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT