தமிழ்நாடு

70 அடி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு

21st Sep 2020 06:34 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய இளைஞரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மீனாட்சிபுரம். அங்கு ஊர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாகவும் அவரை மீட்க வேண்டும் என திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது அந்தக் கிணறு 70 அடி ஆழம் இருந்தது அதில்  5 அடி தண்ணீர் இருந்தது அந்த கிணற்றில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து மேலே வரமுடியாமல் கிணற்றிலிருந்த கடந்த 5 அடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்

இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உள்ளே இறங்கி இளைஞரை மீட்டனர். அவரை விசாரித்தபோது அவர் பெயர் பாண்டி (30)என்பதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் எனத்  தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT