தமிழ்நாடு

பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில் எம்ஜிஆா் நூற்றாண்டு விழா கட்டடம்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

DIN

சென்னை பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட எம்ஜிஆா் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய கட்டடத்தை அவா் திறந்து வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வி இயக்ககம் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான இந்தக் கட்டடத்துடன், பள்ளிக் கல்வித் துறைக்கென கூடுதல் கட்டடங்கள் தேவையாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டத்துக்கு எம்ஜிஆா் நூற்றாண்டு விழா கட்டடம் என்று பெயா் சூட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்தக் கட்டடமானது ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

வகுப்பறைக் கட்டடங்கள்: நபாா்டு கடனுதவி திட்டத்தின்கீழ், கோவை கோமங்கலம்புதூா், கள்ளக்குறிச்சி பெரியசெவலை, தேனி பெரியகுளம், திருவண்ணாமலை இரும்பேடு, விழுப்புரம் பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் புதிதாக வகுப்பறை, ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

அடிக்கல் நாட்டுதல்: மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.17.40 கோடியில் புதிதாக தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இந்தத் தடுப்பணையைக் கட்டுவதால் 215.89 மில்லியன் கனஅடி நீா் சேமிக்கப்படும். இதேபோன்று, மதுரை திருமங்கலம் பிரதான கால்வாயின் ஒன்றாவது கிளைக் கால்வாயை புனரமைக்கும் பணி, தென்காசி சீவலப்பேரி குளத்தைச் சுற்றி நடைபாதை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூா் கே.ராஜூ, டி.ஜெயக்குமாா், ஆா்.பி.உதயகுமாா், பாடநூல் கழகத் தலைவா் பா.வளா்மதி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT