தமிழ்நாடு

தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம்

20th Sep 2020 03:20 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழி தொகுதிக்குள்பட்ட மல்லாங்கிணறில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ தலைமையில், திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மல்லாங்கிணறில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமிற்கு விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். அப்போது புதிய உறுப்பினர்களை இணையதள சேவை முறையில் சேர்க்கப்பட்டதுடன், அதற்கான திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளையும் விழா மேடையில் தங்கம் தென்னரசு நேரில் வழங்கினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி திமுகவில் ஒரு புதிய மறுமலர்ச்சி நிகழ்வாக, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் தொடர்ந்து ஒரு மாதம் வரை நடைபெற உள்ளது.தொடக்கநாளான இன்றே அதிக இளைஞர்கள், பெண்மணிகள் புதிய உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றனர். பிளஸ் டூவில் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்திருக்கலாம்.

ADVERTISEMENT

ஆனால் நீட் தேர்வால் ஒரு மருத்துவராக வேண்டும் என எழை, எளிய மாணவர்கள் மற்றும் பட்டியலின மாணவர்களின் முயற்சியானது தேசிய அளவிலான போட்டித் தேர்வால் பறிபோகிறது. மேலும், விவசாயம், கல்வி முதலான பல்வேறு மாநில உரிமைகளை மத்திய அரசு முற்றிலும் பறிக்க நினைப்பதாலேயே, எந்தஒரு மாநில முதல்வருடனும் கலந்து கொள்ளாமல் நேரடியாக புதிய கல்விக்கொள்கைதனை வரைவு செய்துள்ளது.

மும்மொழிக்கொள்கை மூலம் இந்தி திணிப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள முயல்கிறது. ஆகவே எழை, எளியோர், பட்டியலின மாணவர்களது மற்றும் பொதுமக்களின் எந்த ஒரு உரிமைகளையும் பறிக்கும் விதமான மத்திய அரசின் செயல்பாடுகளையும் திமுக தொடர்ந்து எதிர்த்துப்போராடும் என அவர் பேசினார். உடன் பொதுமக்களும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags : விருதுநகர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT