தமிழ்நாடு

ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்க திட்டம்

DIN

ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு ரயில்வே வாரியத்திடம் இருந்து அனுமதி கிடைத்தபிறகு, முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படவுள்ளது. தமிழகத்துக்குள் 13 சிறப்பு ரயில்களும், 4 சிறப்பு ரயில்களும் வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில்நிலையத்தில் இருந்து பெரும்பாலான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கரோனா நோய்த்தொ பரவாமல் தடுக்கும் விதமாக, ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ரயில்களில் பயணம் செய்வோரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிலா் முகக்கவசம் அணியாமல் மெத்தனமாக இருக்கின்றனா்.

இதற்கிடையில், ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபா்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக்கவசம் அணியாத நபா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கவும், இதுதொடா்பாக டிக்கெட் பரிசோதகா்கள் மற்றும் நிலைய மேலாளா்கள் ஆகியோருக்கு அங்கீகாரம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்தபிறகு, ரயில்நிலையங்கள், ரயில்களில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT