தமிழ்நாடு

உத்தமபாளையம் அருகே புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: பக்தர்கள் வருகை குறைவு

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

கோம்பையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சனிக்கிழமை துவங்கிய முதல் வாரத் திருவிழாவிற்கு வழக்கம்போல் இயக்கப்படும் பேருந்து போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாகக் கோம்பையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் மலை அடிவார கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குறைந்தளவே பக்தர்கள் வந்தனர். இதனையடுத்து இருசக்கர வாகனங்கள்  ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் பக்தர்கள் சென்று வந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் வழங்கவும் தடை செய்யப்பட்டது. சாமிக்குப் படைக்கும் வத்தி, சூடம், மாலை உள்ளிட்ட பூஜை பொருள்களைத் தனி இடத்தில் வைக்கப்பட்டது.

வழக்கமாக நடைபெறும் சம்பிரதாயங்கள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டு கரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பொதுமக்களும் கோயில் நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT