தமிழ்நாடு

விவசாயிகள் மசோதா குறித்து விவாதிக்க 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக

19th Sep 2020 01:03 PM

ADVERTISEMENT


சென்னை: விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இந்த தோழமைக் கட்சிக் கூட்டத்தில் விவசாய மசோதாக்கள் குறித்து கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT