தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,488 பேருக்கு கரோனா; 67 பேர் பலி 

18th Sep 2020 07:13 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மேலும் 5,488 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: இன்று மட்டும், 5,560 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,525 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,75,717ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று தொற்று உறுதியான 5,488 பேரில், 3,293 பேர் ஆண்கள், 2,194 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆகும். இன்று மட்டும் 85,543 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து இதுவரை மொத்தம் 63,03,466 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

ஒரு புறம் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம் சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் 16ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழே கரோனா பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT