தமிழ்நாடு

நடிகர் சூர்யாவைக் கண்டித்து திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

18th Sep 2020 12:32 PM

ADVERTISEMENT


திருப்பூர்: நடிகர் சூர்யாவைக் கண்டித்து திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து இளைஞர் முன்னணி சார்பில்  நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தைக் கண்டத்து ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்த இந்து முன்னணி மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். இதில், இந்து இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் நடிகர் சூர்யாவின் படங்களைக் கிழித்தும், தீயிட்டுக் கொழுத்தவும் முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தியதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

Tags : protests
ADVERTISEMENT
ADVERTISEMENT