தமிழ்நாடு

40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

DIN

குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

கரோனாவால் நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்குவதால் இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவிகித கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை தேர்வுகள் வந்தாலும் அதனை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் முழுவதுமாக குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். 

கல்வித் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். 

சிறப்பாசிரியர்களாக இருக்கும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT