தமிழ்நாடு

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம்: எடப்பாடி கே.பழனிசாமி

17th Sep 2020 04:48 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் புதன்கிழமை படித்தளித்த அறிக்கை:-

தமிழகத்தில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பிற உயர்கல்வி நிறுவனங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. அவரது வழியில் செயல்படும் அரசும், பல உயர்கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து உருவாக்கியும், பல உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக தமிழகத்தின் கிராமப்புறங்கள், மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவு நனவானது. இதன் காரணமாகவே அகில இந்திய அளவில் 26.3 சதவீதம் என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் மிக அதிகமாக, அதாவது 49 சதவீதம் என்ற அளவில் உள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டுமென விழுப்புரம் பொது மக்களும், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அவர்களது கோரிக்கையை ஏற்று, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் நிகழாண்டிலேயே செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT