தமிழ்நாடு

மன்னார்குடி: மகாகவி பாரதியார் நினைவு நாள் கடைபிடிப்பு

11th Sep 2020 01:53 PM

ADVERTISEMENT


மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாரதியார் தலைமறைவாக இருந்து இடத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் , வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கில ஆட்சியரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக , 1918 - ஆம் ஆண்டு மன்னர்குடி அடுத்துள்ள மேல நாகை என்ற கிராமத்திற்கு வந்த பாரதியார். அங்கிருந்த, கொடியாலம் வி.கே.ரெங்கசாமி ஐயங்காருக்கு சொந்தமான பங்களாவில் பத்து நாள் சுந்தரம் ஐயர் என்ற பெயரில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் தான், பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு என்ற நாட்டு விடுதலைக்கான பாடலை பாரதியார் எழுதியுள்ளார்.

தற்போது, அந்த இடத்தில் மகாகவி பாரதியார் நினைவு அறக்கட்டளையின் சார்பில் , பாரதியார் சிலையுடன் கூடிய பாரதியார் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாகவியின் நினைவு நாளையொட்டி , வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு , பாரதி ஆர்வலர் என்.குணசேகரன் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

நினைவு அறக்கட்டளை நிறுவனர் இரா . பாரதி பூமிநாதன், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார் .
பின்னர் , மகாகவியின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வது என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியினையொட்டி , நிகழாண்டு நல்லாசியருக்கான தமிழக அசின்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற மன்னார்குடி தூய வளனார்  அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபமாலைக்கு பாரதி அறக்கட்டளையின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டார். பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமிட்ட கலந்து கொண்டு மகாகவியின் பாடல்களை பாடினர்.

இதில், நெடுவாக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி.குலோத்துங்கன் , ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஆர்.ஆர்.ரவி ,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி ஆர்.யேசுதாஸ் , அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் யு.எஸ்.பொன்முடி, பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி முதல்வர் ஜெ. அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
 

Tags : Mahakavi Bharathiar Memorial Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT