தமிழ்நாடு

சென்னையில் கல்வி விடுதிகளில் சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

9th Sep 2020 03:53 PM

ADVERTISEMENT

 

சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட சமையலர் (ஆண்/பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருயது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

(1) தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். (2) சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். (3) வயது வரம்பு : 1.7.2020 தேதியில் SC/ST-
18 முதல் 35, BC,BCM, MBC&DNC - 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பப்படிவத்தினை https.//www.Chennai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணபிக்க வேண்டும்.

மேற்படி தகுதிகளுடன் சென்னை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல்களை இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை 18.09.2020 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், எண்: 32, இராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகை 2வது தளம், சென்னை-1 என்ற முகவரியில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருயது, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது எனவும், மனுதாரரே அதற்கு முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் சமையலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்
 

Tags : job vacant
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT