தமிழ்நாடு

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

8th Sep 2020 02:21 PM

ADVERTISEMENT

 

குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் ஆறு நாள்களுக்கு நீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 9.9.2020 முதல் 6 தினங்களுக்கு 264.38 மி.க. அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT