தமிழ்நாடு

புதுச்சேரியில் புதிதாக 408 பேருக்கு கரோனா தொற்று: இறப்பு எண்ணிக்கை 298 ஆக உயர்வு

DIN

புதுச்சேரி:  புதுச்சேரியில் சனிக்கிழமை புதிதாக 408 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,566 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 298 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் இன்று(செப் 5) கூறும்போது, ‘‘புதுச்சேரியில் 1,437 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 343, காரைக்காலில் 25, ஏனாமில் 32, மாஹேவில் 8 என மொத்தம் 408 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரியில் 15 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரை சேர்ந்த 82 வயது முதியவர், நெல்லித்தோப்பு பெரியார் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த 53 வயது ஆண் ஆகிய இருவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்த 61 வயது முதியவர், வீரம கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 72 வயது முதியவர், குருவிநத்தம் ஆர்ஆர் நகரை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய மூன்று பேரும் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொசப்பாளையம் வாணிதாசன் வீதியை சேர்ந்த 53 வயது பெண், சாரம் லட்சுமி நகரை சேர்ந்த 57 வயது ஆண், அரியாங்குப்பம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த 47 வயது பெண், காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், முத்தியால்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி, கருவடிக்குப்பம் வரதராஜூ பிள்ளை நகரை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உயிரிழந்தனர்.

கருவடிக்குப்பம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த 62 வயது முதியவர், சின்னையாபுரம் கதிர்வேல் வீதியை சேர்ந்த 43 வயது ஆண் ஆகிய இருவரும் அறுபடை வீடு மருத்துவ கல்லூரியிலும், கல்மண்டபத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியிலும், பாலாஜி நகரை சேர்ந்த 73 வயது முதியவர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரைக்கால் பிரான்சிஸ் சேவியர் வீதியை சேர்ந்த 46 வயது பெண் காரைக்காலிலும், ஏனாம் தோட்டா வீதியை சேர்ந்த 65 வயது முதியவர், ஏனாம் ஜிக்ரிஸ் நகரை சேர்ந்த 90 வயது மூதாட்டி ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.80 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரத்து 566 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 3,158 பேர், காரைக்காலில் 119 பேர், ஏனாமில் 122 பேர் என 3,399 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,469 பேர், காரைக்காலில் 86 பேர், ஏனாமில் 174 பேர், மாஹேவில் 33 பேர் என மொத்தம் 1,762 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,161 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குறிப்பாக, இன்று புதுச்சேரியில் 361 பேர், காரைக்காலில் 48 பேர், ஏனாமில் 24 பேர் என மொத்தம் 433 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 107 (67.05 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  81 ஆயிரத்து 695 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 63 ஆயிரத்து 545 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் போதிய படுகை வசதியில்லாததால் 65.85 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று 20 பேர், இன்று 18 பேர் என கடந்த 2 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது சுகாதாரத்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT