தமிழ்நாடு

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்

4th Sep 2020 08:40 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தில் உள்ள அபராத விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
• கரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.550 அபராதம் விதிக்கப்படும்.
• பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
• பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம். 
• அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத சலூன், ஸ்பா, ஜிம், கடைகளுக்கு ரூ.5,000 அபராதம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT