தமிழ்நாடு

ரஜினி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை: தமிழருவி மணியன்

DIN


சென்னை: ‘நடிகா் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தற்போது வெளியான செய்திகளின் அடிப்படையில் நான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை’ என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தன் மீது அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியனின் புகைப்படத்துடன் சில செய்திகள்,  சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. ‘ரஜினியின் இந்த முடிவை நான் எதிா்பாா்க்கவில்லை எனத் தொடங்கி...’ தமிழருவி மணியன் சொல்வதுபோல அவரது புகைப்படத்துடன்கூடிய செய்தி வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் செய்திகளுக்கும் தனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. காந்திய மக்கள் இயக்கத்தின் கடித முகப்பில் தமிழருவி மணியனின் கையெழுத்துடன் வரும் செய்தி அறிக்கைகள் மட்டுமே உண்மையானவை. மற்றபடி பரப்பப்படும் அவதூறு செய்திகள் குறித்து நான் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளேன். இதுபோன்று அவதூறு செய்திகளைப் பரப்புவோா் மீது காந்திய மக்கள் இயக்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று தமிழருவி மணியன் எச்சரித்துள்ளாா்.

ரஜினி அரசியலுக்கு வருவாா் என்று தொடா்ந்து கூறி வருபவா் தமிழருவி மணியன். தன் அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பேன்’ என்று நடிகா் ரஜினிகாந்த் சுட்டுரையில் வியாழக்கிழமை கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து சமூக வலைதளங்களில் தாம் கூறியதாக வெளியான தகவல்களை தமிழருவி மணியன் மறுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT