தமிழ்நாடு

பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

மருத்துவக் கல்லூரிகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கால தாமதம் செய்யும் தமிழக ஆளுநரைக் கண்டித்தும், இதற்காக ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலர் எஸ்.ஜெ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஏ.அபுபக்கர் சித்திக் கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் முகமது புகாரி, மாவட்ட செயலர்கள் எம்.முகமது ரஹீஸ், எல்.முகமது அஸ்கர், மாவட்டப் பொருளாளர் முகமது இத்ரீஸ், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலர் நஜீப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோட்டத் தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரைக் கண்டித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT