தமிழ்நாடு

7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திங்களன்று நல்ல முடிவு வரும் என நீதிபதிகள் நம்பிக்கை

29th Oct 2020 03:49 PM

ADVERTISEMENT

 

மதுரை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் வரும் திங்கள் கிழமைக்குள் நல்ல முடிவு வரும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தோ்வு எழுதியுள்ள மாணவா் முத்துக்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்புப் பொறுப்பில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்.. தகவல்கள் சரிதான்; ஆனால், அறிக்கை என்னுடையதல்ல: ரஜினி

மேலும், சட்டப்பிரிவு 361-ன் படி ஆளுநர் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும்.

சுமார் 300 முதல் 400 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். எனவே, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி கிருபாகரன், வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவா்களில் ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தோ்வு எழுதியுள்ள மாணவா் முத்துக்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

மேலும் படிக்க.. 'அபிநந்தனை விடுவிக்காவிட்டால்..' பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவுகூரும் எதிர்க்கட்சி

அதில், உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதாவுக்கு ஆளுநா் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. நீட் தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தவும், சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் 11 பேருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணன் வாதிடுகையில், தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால், 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றாா். இருதரப்பு வாதங்களைத் தொடா்ந்து, தமிழக ஆளுநரின் செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கு அதே அமா்வில் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை வழக்குரைஞா் வாதிடுகையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநா் சட்டமசோதாவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் அல்லது பரிசீலிக்குமாறு கூறலாம். சட்டமசோதா தொடா்பாக நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடு விதிக்கவோ இயலாது என்றாா்.

வழக்கு வசாரணையின் போது, ஆளுநரின் முடிவு தெரியும் வரை, மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அறிவிக்கப்படாது என்று தமிழக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Tags : MBBS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT