தமிழ்நாடு

தமிழகத்தில் கட்டப்பட்ட 21 புதிய பாலங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

DIN

சென்னை: தமிழகத்தில் கட்டப்பட்ட 21 புதிய பாலங்களை முதல்வா் பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய பாலங்களை அவா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

செங்கல்பட்டு இரும்புலிச்சேரி மற்றும் சேவூா் கிராமங்களின் இடையில் பாலாற்றின் குறுக்கேயும், ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூா்-வேகாமங்கலம் சாலையிலும், வேலூா் மாவட்டம் ஜிட்டப்பள்ளியிலும், திருவாரூா் மாவட்டம் காளாச்சேரியிலும், ராமநாதபுரம் மாவட்டம் பந்தப்பனேந்தலிலும், தருமபுரி மாவட்டம் பன்னிமடு, காரிமங்கலம் சாவடியூா் ஆகிய இடங்களிலும் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் தாழையாற்றின் குறுக்கேயும், முசிறி வட்டம் மங்களத்திலும், பைத்தம்பாறை-சேருகுடி சாலையில் நாடாா் காலனியிலும் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்டம் பாப்பாகுடி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம், பொட்டல், நாங்குநேரி வட்டம் தாமரைச்செல்வி, தஞ்சாவூா் மாவட்டம் சின்னப்புலிக்குடிகாடு, சடையாா்கோவில் ஆகிய இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் அத்திப்பாளையம், பனப்பட்டி, எல்லைப்பள்ளம், திருப்பூா் மாவட்டம் வீதம்பட்டி ஆகிய இடங்களிலும் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்தப் பாலங்கள் அனைத்தையும் காணொலி வழியாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT