தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி

DIN

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரத்தில் தனித்தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும் என்று கூறிய நிலையில், கடந்த மாதம் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்வு எழுதிய 39,000 பேரில் வெறும் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதேபோன்று 12 ஆம் வகுப்பு தனித்தேர்வில் 40,000 பேர் தேர்வு எழுதிய நிலையில் 12% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT