தமிழ்நாடு

பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி 31-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

27th Oct 2020 03:11 PM

ADVERTISEMENT

 

பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இந்த ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோவதைப் பற்றி எல்லாம் தலைவர்கள் கவலைப்படுவதில்லை. மோதலை உருவாக்குவதையே விரும்புகிறார்கள்.

ADVERTISEMENT

பாஜகவினர் பலரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் ஜாதி, மதம் பெயரால் வன்முறையை தூண்ட வேண்டும் என முயற்சிப்பது தெரிகிறது.

பெண்களைப் பற்றி பாஜகவினர் தவறாகக் கூறி வருகிறார்கள். இவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகின்றனர். என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நான் கூறியதை திரித்து வன்முறையை தூண்டும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
 

Tags : Thol Thirumavalavan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT