தமிழ்நாடு

கொடகனாறு தண்ணீர் பங்கீடு பிரச்னையில் பொதுமக்கள் சாலை மறியல்

27th Oct 2020 03:10 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கொடகனாறு தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தீர்வு ஏற்படுத்தக் கோரி கடந்த சில மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியிலிருந்து வரும் நிலையில் துரிதமாகத் தீர்வுக்கான கோரி திண்டுக்கல் வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பித்தளைப்பட்டி பிரிவு பகுதியில் முதல் கட்டமாக மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர் திண்டுக்கல் வத்தலக்குண்டு புறவழிச் சாலைக்குப் பேரணியாக வந்தனர்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா கோட்டாட்சியர் உஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT