தமிழ்நாடு

புதுச்சேரியில் 2-வது நாளாக கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை

27th Oct 2020 02:28 PM

ADVERTISEMENT


புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று இரண்டாவது நாளாக கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை என்று யூனியன் பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, தொடர்ந்து இரண்டாவது நாளாக புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் யாரும் பலியாகவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே.. மோசமான சுகாதாரம், தரமற்ற குடிநீர்.. குறைவான பலி விகிதத்துக்கு இதெல்லாம் காரணமா?

ஏற்கனவே அக்டோபர் 18-ம் தேதி முதல் முறையாக கரோனாவுக்கு யாரும் பலியாகாத நிலையில், நேற்றும் இன்றும், தொடர்ந்து இரண்டு நாள்களாக கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்று கூறியுள்ளார். புதுச்சேரியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 588 ஆக உள்ளது.

ADVERTISEMENT

அதேவேளையில் புதிதாக 147 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 34,482 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,741 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  30,153 பேர் குணமடைந்துள்ளனர்.
 

Tags : Puducherry coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT