தமிழ்நாடு

மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.38,048-க்கு விற்பனை செய்யப்பட்டது.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

 இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுன் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.38,048-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.33 உயா்ந்து, ரூ.4,756 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.66.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.66,300 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,756

1 பவுன் தங்கம்...............................38,048

1 கிராம் வெள்ளி.............................66.30

1 கிலோ வெள்ளி.............................66,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

 1 கிராம் தங்கம்............................. 4,723

 1 பவுன் தங்கம்............................... 37,784

 1 கிராம் வெள்ளி............................. 65.80

 1 கிலோ வெள்ளி............................. 65,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானாவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT