தமிழ்நாடு

தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு: விஜய பிரபாகரன்

26th Oct 2020 12:41 PM

ADVERTISEMENT

வரும் சட்டபேரவைத் தேர்தலில் தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைய  வாய்ப்புள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு எந்த பயமுமில்லை. ஏற்கெனவே தனித்து நின்று தேர்தலை சந்தித்துள்ளோம். 

அதேபோன்று வரும் தேர்தலில் 3 ஆவது அணிக்கு வாய்ப்புள்ளது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும். 

ADVERTISEMENT

 

அரசியலில் நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக தற்போதைய அரசியல் களம் மாறும். எனவே, தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் என்று பேசியுள்ளார்.  

Tags : தேமுதிக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT