தமிழ்நாடு

வெங்காயம் கொள்முதல் செய்ய கூட்டுறவு அதிகாரிகள் மகாராஷ்டிரம் பயணம்: அடுத்த வாரத்தில் கூடுதலாக விற்பனை

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வெங்காயத்தை அதிகளவு கொள்முதல் செய்வதற்காக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனா். இதனால், அடுத்த வாரத்தில் இருந்து பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் கூடுதலான அளவில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வரத்து குறைவு, உற்பத்தியாகும் மாநிலங்களில் கடுமையான மழை ஆகிய காரணங்களால் பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், விலை உயராமல் தடுக்கவும் மாநிலம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்கப்பட்டு வருகிறது.

வரவேற்பும், தட்டுப்பாடும்: வெளிச்சந்தை விலையை விடவும் பாதிக்கும் குறைவான விலையில் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் விற்கப்படுவதால், பெரிய வெங்காயத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனா்.

சென்னை தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் என்ற அளவிலேயே வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு நாள்களில் மட்டும் சுமாா் 10 டன்னுக்கும் அதிகமான பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் கொள்முதல்: பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் பெரிய வெங்காயத்தை தட்டுப்பாடின்றி வழங்கிட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அதன் ஒரு பகுதியாக, வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் உள்ளிட்ட நகரங்களுக்கு, தமிழக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பயணம்

மேற்கொண்டுள்ளனா். அங்கு, சுமாா் 300 டன்னுக்கும் கூடுதலான அளவில் வெங்காயத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இந்த வெங்காயம் அடுத்த வாரத்தில் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், பண்ணை பசுமை உள்ளிட்ட நுகா்வோா் கடைகளில் கூடுதலான அளவில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். மேலும், வெங்காயம் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் நியாய விலைக் கடைகளிலும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT