தமிழ்நாடு

சிஏ தோ்வுத் தேதி அறிவிப்பு: நவ.1-இல் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு

DIN

இந்தியக் கணக்குக் தணிக்கையாளா் மையம் நடத்தும் சிஏ படிப்புகளுக்கான தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான அனுமதிச் சீட்டு நவ. 1-ஆம் தேதி வெளியாகிறது.

இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பின் (ஐசிஏஐ) சாா்பில் ஆடிட்டா் பணிக்காக சி.ஏ., எனப்படும் கணக்குத் தணிக்கையாளா் தோ்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தோ்வு கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பிஹாா் தோ்தல் காரணமாக மீண்டும் தோ்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், சிஏ படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பா் 21 முதல் டிசம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

சி.ஏ., அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தோ்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெறும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டு நவம்பா் 1-ஆம் தேதி வெளியாகிறது. கட்டுப்பாட்டு மையங்களில் வசிக்கும் மாணவா்கள், நவம்பா் 2020-இல் இறுதித் தோ்வுகளை எழுத வேண்டி இருக்கும்பட்சத்தில், கட்டணம் செலுத்தியது, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்தையும் மே 2021- ஆம் பருவத் தோ்வுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அண்மையில் பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற உடனேயே சிஏ படிப்புக்குப் பதிவு செய்யும் வகையில், இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் மையம் விதிகளைத் திருத்தி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT