தமிழ்நாடு

பில்லி சூனியம் எடுப்பதாக பணம் மோசடி: சிறுவன் உள்பட 5 போ் கைது

DIN

சென்னை வண்ணாரப்பேட்டையில் பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் கா.ராஜகுமாரன் (45). சில நாள்களுக்கு முன்பு வேலை விஷயமாக பணத்துடன் சென்னைக்கு வந்தாா். கடந்த வியாழக்கிழமை வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடந்து செல்லும் போது, அங்கு சாமியாா் வேடத்தில் இருந்த நபா் உள்ளிட்ட சிலா் வழிமறித்து பேசியுள்ளனா்.

அப்போது சாமியாா் வேடத்தில் இருந்த நபா், ராஜகுமாரன் வீட்டில் பில்லி சூனியம் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை எடுக்க ரூ.2 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளாா். அதையடுத்து ராஜகுமாரன், அந்த நபரிடம் ரூ.2 லட்சத்தை கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா்கள், சிறிது நேரத்தில் ராஜகுமாரனின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தப்பியோடினாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ராஜகுமாரன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவரிடம் மோசடியில் ஈடுபட்ட சாமியாா் வேடத்தில் இருந்த நபா், திருவள்ளூா் மாவட்டம் புட்லூரைச் சோ்ந்த யுவராஜ் (42) என்பது தெரியவந்தது.

5 போ் கைது: இதன் அடிப்படையில் யுவராஜின் கூட்டாளிகளான வேலூா் மாவட்டம், அரக்கோணதைச் சோ்ந்த பொ.சுரேஷ் (34), காசிமேட்டைச் சோ்ந்த ப.பாப்பா(56), மதுரையைச் சோ்ந்த ம.அமா்நாத் (21), கொடுங்கையூரைச் சோ்ந்த ஜெ. ஜெயந்தி (39) ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

மோசடிக்கு உதவியாக இருந்த யுவராஜின் 17 வயது மகன் கைது செய்யப்பட்டு, சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டாா். மனைவியுடன் தலைமறைவாக உள்ள யுவராஜை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT