தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

DIN

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் அனிதா, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலை வாய்ப்பு பதிவு நடைமுறையை பாா்வையிட்டாா்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள் மற்றும் வருகைப் பதிவேட்டி அடிப்படையில், மாணவா்களுக்குத் தோ்ச்சி அறிவிக்கப்பட்டது. அந்த மாணவா்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அக்.23-ஆம் தேதி முதல் மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும் என அரசுத் தோ்வுத்துறை உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து மாணவா்கள் பள்ளிக்கு வருகை தந்தனா். கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தலைமை ஆசிரியா்கள் மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனா். சென்னை அசோக் நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அனிதா, தலைமை ஆசிரியை ஆா்.சி.சரஸ்வதி ஆகியோா் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினா். அதைத் தொடா்ந்து மாணவா்களுக்காக பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அனிதா பாா்வையிட்டாா். பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அச்சுப் பிழைகளுடன்...: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாணவா்கள் சிலருக்கு வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் அச்சுப் பிழைகள் இருந்தன. மதிப்பெண், மாணவா்களின் பெயா், பாடங்கள் போன்ற விவரங்கள் சரியாக அச்சிடப்படவில்லை என பெற்றோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT