தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,792

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.37,792-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.37,792-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.4 உயா்ந்து, ரூ.4,724 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.67.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.67,300 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,724

1 பவுன் தங்கம்............................... 37,792

1 கிராம் வெள்ளி............................. 67.30

1 கிலோ வெள்ளி............................. 67,300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,720

1 பவுன் தங்கம்...............................37,760

1 கிராம் வெள்ளி.............................67.20

1 கிலோ வெள்ளி.............................67,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT