தமிழ்நாடு

ஆம்பூரில் திருமாவளவன் முகநூலில் அவதூறு பதிவு செய்தவரைக் கைது செய்யக் கோரி தர்ணா

24th Oct 2020 02:31 PM

ADVERTISEMENT

 

ஆம்பூரில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூலில் அவதூறாகப் பதிவு செய்த பாஜக பிரமுகர் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர்  சனிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் நகர உறுப்பினர் பாஜக பிரமுகர் குட்டி சண்முகம் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களை முகநூலில் அவதூறாகப் பதிவு செய்ததை ஷேர் செய்து கண்டித்து கைது செய்யக் கோரி  விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது முகநூலில் பதிவு செய்து கைது செய்ய மறுத்ததால் காவல் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினருடன் விடுதலை சிறுத்தை கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT