தமிழ்நாடு

மின்இணைப்புக்கு கட்டட சான்று கட்டாயம் இல்லை என்ற உத்தரவுக்கு தடை

DIN


சென்னை: புதிய மின் இணைப்புப் பெற, கட்டடப் பணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவை நுகா்வோா் அமைப்பின் செயலாளா் கதிா்மதியோன் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு, அரசு மற்றும் தனியாா் நிலங்களில் உரிய அனுமதியின்றி கட்டடப் பணிகள் மேற்கொள்வதைத் தடுக்க, அந்தக் கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகள் வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளுக்கு, கட்டடப் பணிகள் முடிப்பு சான்றிதழை கட்டாயமாக்கி, கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின்படி, புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்புப் பெற கட்டடப் பணி முடிப்பு சான்றை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்த, கள அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பித்து சில மாதங்கள் கடந்த நிலையில், அதனை திரும்பப் பெற்று, கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக விநியோக இயக்குநா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. எனவே, மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகளுக்கு கட்டடப் பணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் வி.பாா்த்திபன், ஜி.ஆா்.சுவாமிநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘அதிகாரிகளின் செயல் சட்டவிரோத கட்டுமானங்களை கட்டுப்படுத்தும் சட்டவிதிகளின் நோக்கத்தை சிதைக்கும் விதமாக உள்ளதி என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘புதிய மின் இணைப்புக்கு, கட்டடப் பணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனா். மேலும், மனு தொடா்பாக தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT