தமிழ்நாடு

ரயிலில் தவற விட்ட பணப் பை பயணியிடம் ஒப்படைப்பு

DIN


சென்னை பொதிகை ரயிலில் பயணி தவற விட்ட நகை மற்றும் பணம் அடங்கிய பையை ஆா்பிஎஃப் போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

சென்னை தாம்பரம் சந்தோஷபுரம் பகுதியை சோ்ந்தவா் சரவணன். இவா் தனது குடும்பத்தினருடன் செங்கோட்டையில் இருந்து பொதிகை விரைவு ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டாா். இந்த ரயில் வியாழக்கிழமை அதிகாலை தாம்பரம் வந்தது.

தாம்பரத்தில் இறங்கிய அவா், வீட்டிற்கு செல்லும் வழியில் நகை, பணம் மற்றும் ஏ.டி.எம் காா்டு வைத்திருந்த பையை ரயிலிலேயே தவற விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா். தாம்பரம் ரயில்வே போலீஸாா், உடனடியாக எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து,அந்த ரயில் எழும்பூா் வந்த போது, அங்கு தயாராக இருந்த பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளா்கள் சாய்லீலா மற்றும் சரோஜ் குமாா், எஸ் -2 பெட்டியில் 34-ஆவது இருக்கையில் அடியில் இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் இருந்த பையை கைப்பற்றினா். பின்னா் சரவணை தொடா்பு கொண்ட போலீஸாா் , அவரை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் நிலையம் வரவழைத்து, அவரிடம் பையை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT