தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: 71ஆம் ஆண்டு மீலாது நபியை அடுத்து 12 நாள் தொடர் சொற்பொழிவு

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 71 ஆம் ஆண்டு மீலாது நபியை அடுத்து, 12 நாட்கள் தொடர் சொற்பொழிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூத்தாநல்லூர் ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் 71 ஆம் ஆண்டு தொடர் மீலாத் ஸீரத் உபன்னியாசம்  தொடங்கியது.

ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் உள் அரங்கத்தில் நடத்தப்பட்ட சொற்பொழிவிற்கு, பெரியப் பள்ளிவாயில் கல்லூரி முதல்வர் மெளலவி டி.எம்.ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 12 நாள்களுக்கு தினமும் இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை சொற்பொழிவாற்றப்பட்டது. 

மீலாது நபி குறித்து, முதல்வர் ஜாஹீர் உசேன் கூறியது,

கூத்தாநல்லூர் ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் 71 ஆம் ஆண்டு தொடர் மீலாத் விழா ஸூரத் மாநாடு தொடங்கி நடை பெற்று வருகிறது. 12 நாள்களும் இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை சொற்பொழிவு ஆற்றப்பட்டு வருகின்றன. இஸ்லாமியர்களின் இறை தூதராக வந்தவர் தான் நபிகள் நாயகம். சரித்திரமான 12 இரவுகள் தினமும் சொற்பொழிவு நடத்தப்படும். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பார்கள். 

தற்போது, கரோனா காலம் என்பதால், பொது மக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், சொற்பொழிவு நடத்தப்பட வேண்டும் என்பதால், உள் அரங்கத்தில் சொற்பொழிவாற்றப்படுகிறது. அவைகளை, உள்ளூர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார். அவர் பிறக்கும் முன்பே தந்தையும், பிறந்து ஆறு மாதத்தில் தாயும் இறந்து விட்டனர். நபிகள் நாயகத்தை இறைவன், தனது தூதராக இஸ்லாமியர்களிடத்தில் அனுப்பி வைத்தார். இறைவன் தன்னிடம் இருந்து, திருக்குர்ஆனை, நபிகளிடம் இறக்கி வைத்தார். திருக்குர்ஆன் முழுவதையும் மக்களிடத்தில் படித்துக் காட்டினார். இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம்தான், இறைவனின் கடைசி தூதராக நம்பியுள்ளனர். அவருடைய பிறந்த நாளைத்தான் மீலாது நபி எனச் சொல்லப்படுகிறது.

இந்த 12 நாட்களும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை உபன்னியாசம் செய்யப்படுகிறது.12 ஆவது நாளில், நபிகளின் புகழைப் பரப்பியபடியே ஊர்வலமாகப் புறப்பட்டு, கூத்தாநல்லூர் நகரம் முழுவதும் சென்று, மீண்டும் பெரியப் பள்ளிவாயில் அடையப்படும். ஊர்வலம் செல்லும் போது, ஊர்வலத்தில் செல்பவர்களுக்கு, முஸ்லீம், இந்துக்கள் என அனைவரும் வேற்றுமை பார்க்காமல், குளிர்பானங்ளும், தேனீரும், மிட்டாய்களும் வழங்குவர். 

இந்த ஆண்டு கரோனா என்பதால், ஊர்வலம் நடத்தப்படவில்லை. அன்றைய தினம், புத்தாடை உடுத்தி, உணவுகள் தயாரித்து, ஏழை, எளியவர்களுக்கும் வழங்கி மகிழ்வர் என்றார். மீலாது நபி மாநாட்டில், மெளலவிகள் ஏ.எல்.முஹம்மது அலி, கே.என்.ஏ.முஹம்மது மன்சூர், எஸ்.அப்துர் ரஹிம், எம்.எஸ்.அஹம்மது மீரான், டி.எம்.ஏ.முஹம்மது இல்யாஸ், எம்.கிபாயத்துல்லாஹ் மற்றும் எம்.அப்துல் ஹக்கீம் உள்ளிட்டோர் நபிகள் நாயகம் குறித்த வாழ்க்கை வரலாற்றை விளக்கினர். மாநாடு ஏற்பாடுகளை, ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் நிர்வாகிகள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT