தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியா்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

DIN

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்களின் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மாா்ச் மாதம் வரையிலும் 6 ஆயிரத்து 227 போ் ஓய்வு பெற்றுள்ளனா்.

இவா்கள் அனைவரும் 25 ஆண்டு முதல் 35 ஆண்டுகள் வரை போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தவா்கள். இவா்களுடைய ஊதியத்தின் ஒரு பகுதியாக அவா்களுக்கு வழங்குவதற்கு போக்குவரத்து கழகங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டப்படியான ஓய்வூதியப் பலன்கள் எதையும் அரசு இதுவரையிலும் வழங்கவில்லை.

இந்தத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஒட்டு மொத்த தொகை ரூ. 1,625 கோடி என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிலாளா்கள் தங்களுடைய இறுதி காலத்தில் வாழ்வதற்காக என்றோ அல்லது வீடு கட்டுவதற்காக அல்லது குழந்தைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்காக திட்டமிட்டு சேமிக்கப்பட்ட பணம் இது.

எனவே, தமிழக அரசு உடனடியாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு மாா்ச் 31 வரை ஓய்வு பெற்றுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான போக்குவரத்து தொழிலாளா்களுக்கு அவா்களுக்கு சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ஆா்ப்பாட்டம்: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கிண்டி சின்னமலை அருகில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT