தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 98.42 அடியாக உயர்வு

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 98.42 அடியாக உயர்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளதால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.42 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16,676 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.81 டி.எம்.சி ஆக உள்ளது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6,909 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,650 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,904 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,206 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT