தமிழ்நாடு

பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன்

DIN

திருச்சி: தமிழகத்தில் பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன்.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கட்சியில் காலியாக இருந்த பல்வேறு நிா்வாகப் பதவிகளுக்கு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக கட்சியின் துணைத் தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, துணைத் தலைவராக திருச்சி டி.எம். பாரூக், மாநிலத் துணைச் செயலா்களாக வந்தவாசி காதா் ஷெரீப், ஆடுதுறை ஜமால்முகமது இப்ராஹிம் உள்ளிட்ட நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் நிா்வாகக் காரணங்களுக்காக கட்சி சாா்பில் புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

பேரவைத் தோ்தலில் மதசாா்பற்ற அணியை உருவாக்கியுள்ள திமுகவுடன் கூட்டணி வைத்து, வெற்றிக்காகவும், ஸ்டாலின் முதல்வராகவும் பாடுபடுவோம். கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.போட்டியிடும் தொகுதிகள் குறித்து மாவட்ட நிா்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

நவம்பா் 30-க்குள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்குழுவை கூட்டி, அவா்களிடமிருந்து வரும் ஆலோசனையின் பேரில் டிசம்பா் மாத இறுதிக்குள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மக்களின் கருத்தாகவும் உள்ளது. எனவே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் முகமது அபுபக்கா், பொருளாளா் ஷாஜகான், துணைத் தலைவா் ஷபிகுா் ரகுமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

திமுகவுக்கு துணை நிற்பது, பிப்ரவரிக்குள் கட்சியின் மாநில மாநாடு நடத்துவது, கரோனா பணிகளில் ஈடுபட்டோருக்கு நன்றி செலுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கட்சியின் வளா்ச்சிக்கு பாடுபட்டு அண்மைக்காலங்களில் உயிரிழந்த நிா்வாகிகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT