தமிழ்நாடு

தம்மம்பட்டியில் காகித, நெகிழி தோரணங்கள் விற்பனை தொடக்கம்

DIN

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் ஆயுதபூஜைக்கான காகித, நெகிழித் தோரணங்கள் விற்பனை தொடங்கியுள்ளது.

ஆயுதபூஜைக்கு வழக்கமாக மக்கள், தங்கள் வீட்டிலுள்ள ஆயுதங்கள், வாகனங்கள், தொழில் செய்யும் சாதனங்கள் என அனைத்தையும் நன்கு கழுவி, சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு, பூ வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது கூடுதலாக அழகுபடுத்தக் காகித மாலைகள், நெகிழித்தோரணங்களை வைத்தும், இருசக்கர, நான்கு சக்கரவாகனங்களில் தோரணங்கள் கட்டி அழகுபடுத்துவதும் வழக்கம்.

அதனால் அத்தகைய நெகிழி, காகித தோரணங்கள், பூக்கள் போன்றவைகள் தற்போது விற்பனை தொடங்கிவிட்டன. ஆயுத பூஜைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இப்போதே மக்கள் அழகுத் தோரணங்களை வாங்கிவைக்கத் தொடங்கிவிட்டனர்.

வாயில் தோரணங்கள்(பெரியது) ரூ.500, சிறியது ரூ.220, நடுத்தரமானது ரூ.150, வெங்கடாசலபதி மாலை ரூ.150, வாயிலில் ஆயுதபூஜை என்ற எழுத்துக்கள் உள்ள தோரணம் ரூ.35, வெல்கம் என்ற எழுத்துத்தோரணம் ரூ.35, இருசக்கர வாகனங்களுக்கு வைக்கப்படும் கலர் கலரான குஞ்சம் ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு வைக்கப்படும் குஞ்சம் ரூ.100 ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.

இதுகுறித்து அழகுத் தோரணங்கள் விற்பனையாளர் நாகராஜ் கூறியதாவது, 

இன்னும் கூடுதலான அழகு தோரணங்கள் வந்துள்ளது. மக்கள் இப்போது இருந்தே மக்கள் வாங்கத் தொடங்கிவிட்டனர் என்றனர். தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் கடை, வீடுகளில் தற்போது சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கிவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT