தமிழ்நாடு

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றபோது ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உடல் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம் பாறை மேட்டு தெருவைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் முத்து. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் முத்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனை அடுத்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான மீட்புப் படையினர் மாயமான இளைஞரை தேடி வந்தனர். ஆற்றின் நீர் வரத்து அதிகமாக இருந்ததாலும்,  வெளிச்சம் குறைந்ததாலும் ஞாயிற்றுக்கிழமை  இரவு மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட  1,755 கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை இரவு தற்காலிகமாக  நிறுத்தப்பட்டது. திங்கள் கிழமை காலையில் நீர்வரத்து குறைந்ததால் உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்பு மீட்பு குழுவினர் 20 பேர்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீவிரமாக தேடினர். 

திங்கட்கிழமை மாலை வரை  ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் செவ்வாய்கிழமை காலையில் மீண்டும் தீயணைப்புத்துறையின் மீட்புக் குழுவினர் தங்கள் பணியை தொடங்கினர். அப்போது சீலையம்பட்டி முல்லைப் பெரியாறு அணை அருகே  இளைஞர் சடலமாக கிடப்பதை தீயணைப்பு குழுவினர் பார்த்தனர்.

தொடர்ந்து மூன்று நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில், இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதை அறிந்து அவரது பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT